--- --:--:-- --

அரசு மருத்துவமனை கழிவறைத் தொட்டியில் சிசு உடல் மீட்பு..!

7

நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி அரசு மருத்துவமனை கழிவறை தொட்டியில் உயிரிழந்த நிலையில் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டார பகுதிகளான வீரவனல்லூர், கங்கனங்குலம், புதுக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பலர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அந்த மருத்துவமனை தொட்டி நேற்று நிறைந்துள்ளது. எனவே அதனை துப்புரவு தொழிலாளர்கள் சுத்தம் செய்து இருக்கின்றனர்.

 

அப்பொழுது குழாயில் பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தையின் தொப்புள் கொடி கூட அறுக்கப்படவில்லை. பெற்றோர் யாரென தெரியாத நிலையில் குழந்தை கொலை செய்யப்பட்டதா அல்லது இறந்து பிறந்ததா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon