சுகாதாரத்துறை அமைச்சருக்கு 2வது முறையாக கொரோனா..!
சத்தீஷ்கர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் இரண்டாவது முறையாக கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது டுவிட்டர் பதிவில் லேசான அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை மேற்கொண்டதாகவும் அதில் தொற்று உறுதியானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ள அவர் தம்முடன் தொடர்புடைய அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் தொற்றால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





