--- --:--:-- --

தமிழகத்தில் அதிகரித்த ஓமிக்ரான்..!

4

மிழகத்திலும் ஓமிக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரொனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை அமைச்சர் சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வீடு நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழகத்தில் ஓமிக்ரான் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது என கூறினார். இதில் 66 பேர் குணமடைந்த நிலையில் 54 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளதாக தெரிவித்தார். ஓமிக்ரான் பாதித்தவர்களுக்கு 4 முதல் 5 நாட்களிலேயே தொற்று நீங்கி விடுவதாகவும் அவர் விளக்கமளித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon