--- --:--:-- --

கருவுற்றதை மறைக்க மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்த பெண்..!

7

சென்னையில் காதலியுடனான எல்லை மீறிய பழக்கத்தால் கருவுற்று இருந்த இளம்பெண் பெற்றோருக்கு பயந்து மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் வயிற்றில் இருக்கும் சிசு கலைந்துள்ளது.

 

கோடம்பாக்கத்தை சேர்ந்த அந்த இளம்பெண் தொழிற்பேட்டையில் பயின்று வந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. விழுந்து கிடந்த பெண்ணின் அருகே தொப்புள் கொடியுடன் இறந்த நிலையில் சிசு கிடந்துள்ளது.

 

விசாரணையில் காதல் எல்லை மீறிய பழக்கத்தால் கர்ப்பம் தரித்த விஷயம் தெரிந்து காதலன் கைவிடவே, அந்த பெண் தனது பெற்றோருக்கு தெரியாமல் மறைத்து வந்துள்ளார்.

 

8 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு திடீரென வலி ஏற்பட்டதால் பெற்றோருக்கு பயந்து மாடியில் இருந்து குதித்த நிலையில் குழந்தை இறந்தது தெரியவந்தது. இளம்பெண்ணின் காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon