பாஜக முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை..!
பிரதமர் மோடி பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநில முதல்வர்களுடன் வாரணாசியில் ஆலோசனையில் ஈடுபட்டார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி சென்றுள்ள பிரதமர் மோடி காசி விஷ்வநாதர் கோயிலின் புதுப்பிக்கப்பட்ட வளாகத்தை நேற்று திறந்து வைத்தார்.
இந்த நிலையில் பயணத்தின் இரண்டாவது நாளான இன்று பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். உத்தரப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, ஹரியானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் முதலமைச்சர்களும், பீகார், நாகலாந்து ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராவது குறித்தும், மத்திய அரசு திட்டங்களை அமலாக்குவதும் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





