3 மகன்களையும் ராணுவத்திற்கு அனுப்பிய வீரத்தாய்க்கு விருது..!
நெல்லை மாவட்டம் பம்பையில் ஒரே குடும்பத்தில் 3 பேர் ராணுவத்தில் பணியாற்றியதை ஊக்குவிக்கும் வகையில் மூதாட்டி ஒருவருக்கு இந்திய ராணுவம் சார்பில் வீரத்தாய் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
ராமகிருஷ்ணன், சுப்புலட்சுமி தம்பதியின் மூத்த மகன் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில் மற்ற 2 பேரும் தொடர்ந்து ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். இதனால் தன்னுடைய மூன்று மகன்களையும் ராணுவத்திற்கு அனுப்பிய சுப்புலக்ஷ்மி அம்மாள் பாட்டிக்கு ராணுவம் சார்பில் வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





