--- --:--:-- --

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்வு..!

1

தலைநகர் டெல்லியில் ஓமிக்ரான் தொற்றால் மேலும் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து நாடெங்கும் ஓமிக்ரான் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.

 

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்தில் ஓமிக்ரான் தொற்று அதிவேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் ஓமிக்ரான் தொற்று எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

 

டெல்லியில் இன்று மேலும் 4 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அங்கு அங்கு தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 49ஆக அதிகரித்துள்ளது.

 

பாதிக்கப்பட்ட ஆறுபேரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என குறிப்பிட்ட டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் இவர்களில் ஒருவர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon