--- --:--:-- --

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்படுமா..?

2

மிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை மறுநாள் உடன் முடிவடைகிறது. இந்நிலையில் கொரொனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் வழங்கலாமா அல்லது புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

 

தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் இறையன்பு, துறை செயலாளர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். தமிழகத்தில் புதிய வகை ஓமிகிரான் பாதிப்பு இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

அதன் அடிப்படையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா, புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமா உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் தமிழகத்தில் தடுப்பூசி நிலவரம் ஆகியவை குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

 

சில மாவட்டங்களில் பொது இடங்களில் வருவோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon