--- --:--:-- --

மகன் கவனித்துக் கொள்ளாததால் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி..!

10

தனது மகன் சரிவர கவனித்துக் கொள்ளவில்லை என கணவர் இறந்த அதே நாளில் சென்னை பெசன்ட் நகரில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளார்.

 

பெசன்ட் நகர் கடற்கரையில் பாதுகாப்பு பணியில் இருந்த ராஜா என்ற காவலர் கழுத்து அளவு தண்ணீரில் சென்று கொண்டிருந்த மூதாட்டியை கவனித்து உடனடியாக கடலுக்குள் இறங்கி மீட்டுள்ளார்.

 

அவரை விசாரித்ததில் புரசைவாக்கத்தை சேர்ந்த மகேஸ்வரி என்பது தெரியவந்தது. சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் மகனை வரவழைத்த காவல்துறையினர் அவர்களை வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon