ரவுடி பேபி சூர்யாவை கைது செய்யக் கோரி பெண்கள் புகார்..!

வுடி பேபி சூர்யாவை கைது செய்யக் கோரி பெண்கள் சிலர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

கடந்த சில நாட்களாக டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

குறிப்பாக ரவுடி பேபி சூர்யா குடும்ப பிரச்சினைகள் இருக்கும் பெண்களை குறிவைத்து அவர்களை மூளைச் சலவை செய்து வெளிநாடுகளுக்கு பாலியல் தொழிலுக்காக அழைத்து வருவதாகவும் குடும்ப பெண்கள், குழந்தைகள் என புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பரப்பிவிடுவேன் என மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.

 

எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி பெண்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் குறித்து உரையாட வந்தவர்களை நீண்ட நேரம் காக்க வைத்து விசாரிக்காமல் போலீசார் அனுப்பியதாக கூறப்படுகிறது.

 

இதனை தொடர்ந்து வேளச்சேரி பகுதியை சேர்ந்த பெண் ஜெனிஃபர், மேடவாக்கம் பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காவல் ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.