தக்காளி வரத்து இல்லாததால் விலை உயர்வு..!
மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து இல்லாததால் தக்காளி சில்லரை விலை மீண்டும் 90 ரூபாயாக அதிகரித்துள்ளது.
கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு நாளொன்றுக்கு 80 தக்காளி லாரிகள் வந்த நிலையில் தொடர் மழையால் லாரிகள் வரத்து 30 ஆக குறைந்தது.
மேலும் சனிக்கிழமை அன்று மகாராஷ்டிராவில் இருந்து 10 தக்காளி லாரிகள் வந்ததால் விலை பாதியாகக் குறைக்கப்பட்டு 40 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் போக்குவரத்து செலவு, டோல்கேட் கட்டணம் உள்ளிட்ட காரணங்களால் நஷ்டம் ஏற்படுவதால் மகாராஷ்டிராவில் இருந்து தக்காளி வரத்து இல்லை என கூறப்படுகிறது. இதனால் மொத்த விற்பனையில் தக்காளி கிலோ 75 ரூபாய்க்கும் சில்லரை விலையில் 90 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.






