--- --:--:-- --

கொரோனாவிலிருந்து மீண்டவர்களை தாக்குகிறதா ஒமிக்ரான் வைரஸ்..!

6

ஒமிக்ரான் வைரஸ் கொரொனாவில் இருந்து மீண்டவர்களை தாக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தற்பொழுது கொரொனா வைரஸ் உருமாறி அதிக வீரியமுள்ள வைரசாக பரவி வருகிறது.

 

இந்த வைரசுக்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. இவை அதிகளவில் பரவி ஆபத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதனால் தென் ஆபிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

 

இந்த நிலையில் கொரொனாவில் இருந்து மீண்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என கூறப்பட்டது. ஆனால் கொரொனாவில் இருந்து மீண்டவர்களையும் பாதிக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon