தகாத உறவால் குழந்தை பிறந்ததால் கொலை செய்த பாட்டி..!

காத உறவால் தன்மகள் குழந்தை பெற்ற நிலையில் தன் பேரக் குழந்தையை சாக்குமூட்டையில் கட்டி வைத்து கொலை செய்த பாட்டியை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியம்.

 

இவரின் 20 வயது மகள் திருமணத்திற்கு முன்பாகவே காதலனுடன் நெருக்கமாக இருந்ததால் கர்ப்பமாகி ஆண் குழந்தையைப் பெற்றுள்ளார். இதனை அறிந்த பாட்டி குழந்தையை சாக்கில் கட்டி வைத்து மறைத்துள்ளார். பின்னர் குழந்தை பெற்ற பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அப்போது நடந்த விசாரணையில் குழந்தையின் நிலை குறித்து தெரிய வந்தது. உடனடியாக மீட்கப்பட்ட குழந்தை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஒன்பது நாட்களுக்கு பிறகு குழந்தை உயிரிழந்தது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பாட்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.