சென்னை மாணவிக்கு பாலியல் தொல்லை கல்லூரி பேராசிரியர் மீது புகார்..!

சென்னை கோயம்பேட்டில் தனியார் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

சில தினங்களுக்கு முன்பு கோவையில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

 

அதைத்தொடர்ந்து சென்னை கோயம்பேட்டில் இயங்கிவரும் தனியார் கல்லூரியில் மாணவ மாணவிகள் காலையிலிருந்து கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.