--- --:--:-- --

தமிழகத்தில் டிசம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!

11

தமிழகத்தில் கொரொனா கட்டுப்பாடுகள் தளர்வுகளுடன் டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா கர்நாடகாவை தொடர்ந்து கேரளாவுக்கும், பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

நீச்சல் குளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம், இறப்பு ஆகியவற்றிற்கு ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும். கொரொனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தவறாமல் தடுப்பூசி எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கைகளை அடிக்கடி சோப் கொண்டு சுத்தம் செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடைகளில் உணவு வகை கடைகளில் சுத்திகரிப்பான் வைத்திருப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைகளில் பணிபுரிபவர்கள், வாடிக்கையாளர்களும் கட்டாயமாக கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon