கமல்ஹாசன் குறித்து வெளியான வீடியோ தற்போது எடுக்கப்பட்டதல்ல..!
நடிகர் கமல்ஹாசன் குறித்து வெளியில் உலவும் நிழல் படம் 2 ஆண்டுகளுக்கு முன்பு அப்பல்லோவில் காலில் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போது வெளியான புகைப்படம் என்று மக்கள் நீதி மையம் கட்சி விளக்கமளித்துள்ளது.
மேலும் கட்சித்தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பவில்லை என்றும் அவர் நலமுடன் இருக்கிறார் எனவும் விரைவில் கமல்ஹாசன் வீடு திரும்புவார் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.






