--- --:--:-- --

அமலாக்கத்துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர்..!

6

தொழிலதிபர் கொடுத்த புகாரில் கேரள மாநிலம் கொச்சி அமலாக்கத் துறை அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விசாரணைக்காக ஆஜரானார்.

 

கேரள தொழிலதிபர் ஷர்மிளாவிடம் இருந்து 14 கோடி ரூபாய்க்கு நகை பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 3 கோடி ரூபாயை விஜயபாஸ்கர் கொடுத்த நிலையில் மீதமுள்ள பணத்தை கேட்டால் தனக்கு மிரட்டல் விடுப்பதாக ஷர்மிலா நெல்லை சரக காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.

 

இந்த நிலையில் கொச்சினில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆஜராகி அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon