மீண்டும் ஹன்சிகாவுடன் சேர்ந்து நடிக்கிறாரா சிம்பு..?
முன்னாள் காதலி விஷயத்தில் சிம்பு எடுத்திருக்கும் முடிவு பலரையும் வியக்க வைத்துள்ளது. வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் வசூல் வேட்டை நடத்தி வருவதை பார்த்து படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில் மற்றொரு படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நந்தா பெரியசாமி இயக்கும் படத்தில் சிம்புக்கு முன்னாள் காதலியான ஹன்ஸிகா ஜோடியாக சேருகின்றனர். ஹன்சிகாவுடன் காதல் முறிவுக்கு பிறகு நட்பாக பழகி வருகிறார் சிம்பு.
இந்த நிலையில்தான் ஹன்சிகாவின் 50வது படமான மகாவில் அவருக்கு காதலராக நடித்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் ஹன்சிகாவுடன் சேர்ந்து நடிக்க இருக்கிறார். அவரின் இந்த முடிவு குறித்து அறிந்த பலரும் வியக்கிறார்கள்.
முன்னாள் காதலியை தோழியாக பார்க்கும் சிம்புவின் மெச்சூரிட்டி வேற லெவல் என்கின்றனர் ரசிகர்கள். ஹன்சிகா மட்டும் அல்லாத மற்றொரு முன்னாள் காதலியான நயன்தாராவுடன் சேர்ந்து இது நம்ம ஆளு படத்தில் நடித்தார் சிம்பு என்பது குறிப்பிடத்தக்கது.






