12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை ..!
12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, நெல்லை, தஞ்சை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
8 மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.






