--- --:--:-- --

கார் விபத்தில் மாடல் அழகிகள் உயிரிழந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது..!

5

கேரளாவில் மாடல் அழகிகள் இருவர் உட்பட 3 பேர் கார் விபத்தில் பலியான வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த 2019ஆம் ஆண்டு கேரள அழகி போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்த தோழிகளான இருவர் கொச்சி ஓட்டலில் நடைபெற்ற விருந்து ஒன்றில் கலந்து கொண்டு காரில் திரும்பியுள்ளார். அப்பொழுது கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாடல் அழகிகள் இருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

 

மேலும் விபத்துக்குள்ளான கார் சந்தேகப்படும் வகையில் நடந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே விருந்து நடத்த ஹோட்டலில் பதிவான காட்சிகளை வைத்து பார்த்ததில் ஹோட்டல் உரிமையாளர் கைதாகியுள்ளார்.

 

மேலும் இளம்பெண்களை ஆடி காரில் பின் தொடர்ந்த சைஜூ என்பவர் என்பதும் தெரியவந்தது. விருந்தில் பங்கேற்ற இவர் இளம் பெண்கள் இருவருக்கும் வழங்கிய போதை பொருட்களை அவர்கள் வாங்க மறுத்ததால் கேரள மாடல்கள் சென்று காரை பின்தொடர்ந்து உள்ளார்.

 

இதையடுத்து போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்து விசாரித்துள்ளனர். இதையடுத்து குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கைது செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon