--- --:--:-- --

இரண்டரை வயது சிறுவனின் அசத்தல் சாதனைக்கு கிடைத்த விருது..!

4

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பள்ளிக்கு செல்லாத இரண்டரை வயது சிறுவன் ஒருவன் இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள், தேசிய சின்னங்கள் போன்றவற்றை மளமளவென கூறி அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த தம்பதியர் ஐயப்பன் – வசந்தி இவர்களுக்கு யஷ்வந் என்ற இரண்டரை வயது குழந்தை உள்ளது. பள்ளிக்கு செல்லாத இந்த சிறுவன் இந்திய மாநிலங்களின் பெயர்களைச் சொன்னால் அதன் தலைநகரை நொடியில் கூறிவிடுவான்.

 

அதோடு மட்டுமல்லாமல் தேசிய சின்னங்களின் பெயர்கள், நாடுகளின் கொடிகள் ,தலைவர்களின் பெயர்கள் என 14 தலைப்புகளில் 600க்கும் மேற்பட்ட பெயர்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவரது சாதனையை பாராட்டி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon