போலி சுற்றுலா இணையதளங்களை உருவாக்கி மோசடி ..!
வெளிநாட்டில் இருந்து போலி சுற்றுலா இணையதளங்களை உருவாக்கி மோசடி செய்யும் வடமாநில கும்பலின் தலைவனுக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் லுக்அவுட் நோட்டிஸ் கொடுத்து பிறப்பித்துள்ளனர்.
முன்னதாக மோசடி கும்பலை சேர்ந்த தேவராஜ் சிங் மற்றும் சாவந்த் சிங் என்ற இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் இந்த மோசடிக் கும்பலின் தலைவன் தாய்லாந்தில் இருந்து கொண்டு மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்படி தாய்லாந்தில் தலைமறைவாக இருக்கும் திலீப் சிங்கிற்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் தூதரகத்தின் உதவியை நாடியுள்ளனர்.






