கமல்ஹாசனின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை..!
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும், அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் அறிவித்து இருந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கமல்ஹாசன் அவர்கள் தற்போது கொரோனா சிகிச்சையில் உள்ளார் என்றும் அவரது உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கமல்ஹாசன் விரைவில் குணமாகி அடுத்த சில தினங்களில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





