--- --:--:-- --

பள்ளி மாணவியிடம் உதவி தலைமை ஆசிரியர் அத்துமீறியதாக குற்றச்சாட்டு..!

13

விழுப்புரம் அருகே பள்ளி மாணவிகளிடம் அத்துமீறியதாக அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மீது குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

 

மரக்காணம் அருகே உள்ள நடுகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த பதினோராம் வகுப்பு மாணவியை பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் தன்னிடம் அத்து மீறியதாக கூறியுள்ளார். இது தொடர்பாக சிறுமி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

 

நேரடியாக பள்ளிக்கு சென்று உதவி தலைமை ஆசிரியரை பணி நீக்கம் செய்யக்கோரி மனு அளித்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எனவே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon