--- --:--:-- --

தென்காசியில் கடைக்குள் புகுந்த அரசுப் பேருந்து..!

12

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் குண்டும் குழியுமான சாலையால் அரசு பேருந்து ஒன்று அருகே உள்ள கடைக்குள் புகுந்து சேதமாகி உள்ளது. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிப்பதற்காக திருநெல்வேலி செல்லும் சாலையில் தோண்டப்பட்ட குழியில் ஆறு மாதங்களாக சரிவர தோண்டவில்லை என கூறப்படுகிறது.

 

அந்த பகுதிக்கு சென்ற அரசு பேருந்து ஒன்று சக்கரத்தின் அச்சு முறிந்து அருகிலுள்ள கடைக்குள் சென்றுள்ளது. அந்த கடை மூடி இருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon