மகனே தந்தையை அடித்து கொலை..!
திருவள்ளூர் அருகே தந்தையை உருட்டு கட்டையால் அடித்துக் கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட மகனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் அடுத்த வெங்கத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்.
50 வயதான கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது ஒரே மகன் பாண்டியன். மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார். மனநலம் பாதிக்கப்பட்ட தன் மகனை பெற்றோர்கள் பல மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தும் அவர் குணமாகவில்லை என்று சொல்லப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலகிருஷ்ணன் தனது மகனை சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்று மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்த நிலையில் பாலகிருஷ்ணனின் மனைவி வேலையின் காரணமாக உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
வீட்டில் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் பாண்டியன் ஆகியோர் இருந்திருக்கின்றனர். இரவு நேரத்தில் மின்சாரம் தடை பட்டுள்ளது. அப்பொழுது பாலகிருஷ்ணன் தன் மகன் பாண்டியனிடம் மெழுகுவர்த்தியை கொண்டு வருமாறு கூறியிருக்கிறார். அப்போது தந்தை மகனுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அடித்துக் கொலை செய்துள்ளார்.






