மருத்துவத் துறைக்கான உச்சி மாநாட்டை துவக்கி வைத்த பிரதமர் மோடி..!
புதிய கண்டுபிடிப்புகளுக்கான முதலாவது உலக உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். அப்பொழுது மருந்து துறை உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உடன் அவர் கலந்துரையாடினார்.
மாநாட்டில் பேசிய பிரதமர் இந்தியாவின் வாழ்க்கை நிலை, மருத்துவம், தடுப்பூசி, மருத்துவத்துறை தொழில்நுட்பங்கள் என சுகாதாரத் துறையின் ஒவ்வொன்றும் கடந்த இரண்டு ஆண்டுகளில் உலக அளவில் கவனம் பெற்று இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்திய மருத்துவத்துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டு உயர்ந்திருப்பதாக குறிப்பிட்டார். உலகத்தின் நம்பிக்கையை இந்திய சுகாதாரத் துறை பெற்று மாறி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி மற்றும் மருந்துகளுக்கு தேவையான முக்கிய மூலப் பொருட்களில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.






