அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்..!
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி யாக வலுவடைந்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வட தமிழக கடலோர பகுதி அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிக்கு அருகே தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் தற்போது நிலை கொண்டுள்ளது.






