கேக்கில் போதை மாத்திரை இருப்பதாக வைரல் வீடியோ..!
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் குழந்தைகள் உண்ணும் கேக்கில் போதை மாத்திரை இருப்பதாக வீடியோ வைரலானது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
சிறுவர்கள் கடைகளில் வாங்கி உண்ணும் திண்பண்டம் மற்றும் குளிர்பானங்களால் சிலர் வாந்தி, மயக்கத்துடன் இருக்கும் நிலையும் ஏற்படுகிறது. இதற்கு உணவுப் பொருட்களில் உள்ள கலப்படமே காரணமாக உள்ளது.
இந்த நிலையில் சிறுவர்கள் உண்ணும் கேக்கில் இரண்டு போதை மாத்திரைகள் இருப்பதாகவும் இதனை உண்டால் குழந்தைகளுக்கு பக்கவாதம் ஏற்படுவதாக வீடியோ ஒன்று வைரலானது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள தின்பண்டங்களை மொத்தமாக கைப்பற்றி சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது சம்பந்தப்பட்ட கேக் வந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் வியாபாரிகளிடம் எச்சரிக்கை விடுத்தார்கள்.






