பேருந்து, ரயில் நிலையங்களில் தடுப்பூசி..!
அனைத்து மாநில சுகாதார துறை அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது. இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் உள்ளிட்ட அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது உரையாற்றிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாநில அரசுகள் அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் தடுப்பூசி மையங்களைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.






