தேநீர் கடைக்கு சென்று மழை பாதிப்பை கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்..!
சென்னையில் மழை கால இலவச மருத்துவ முகாமை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடக்கிவைத்தார். ஆஸ்டின் நகரில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்த அவர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளையும் வழங்கினார்.
மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களை தடுக்கும் நோக்கில் மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அடிப்படை மருத்துவ பரிசோதனைகளுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. சிறப்பு மருத்துவ முகாம்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை அவர் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
சென்னையில் தேனீர் கடை ஒன்றுக்கு சென்ற முதலமைச்சர் அங்கிருந்தவர்களிடம் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.






