--- --:--:-- --

விடிய விடிய மது அருந்திய 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு..!

2

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் விடிய விடிய மது அருந்திய 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

பெயின்டர் வேலை பார்க்கும் சக்திவேல், பார்த்திபன், முருகானந்தம் ஆகியோர் விடிய விடிய மது அருந்தியுள்ளனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி நேற்றிரவு மதுபான கடைக்கு சென்று மது வாங்கி அதிகளவில் குடித்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் அவர்கள் நேற்று இரவு உடல்நிலை சரியில்லாததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதிகமான மது உட்கொண்டதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon