--- --:--:-- --

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

5

சென்னையில் இரண்டாவது நாளாக நேற்றும் விடிய விடிய பரவலாக கனமழை பெய்ததால் நெல்லை ,உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் குமரி கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நேற்று தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

 

சென்னையில் நேற்று அதிகாலை முதல் கனமழை பெய்த நிலையில் பகல் நேரங்களில் விட்டுவிட்டு மழை பெய்தது. சென்னையில் நள்ளிரவு மீண்டும் தொடங்கிய மழை இரவு முழுவதும் வெளுத்து வாங்கியது.

 

சென்னையில் 2வது நாளாக விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர். தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon