--- --:--:-- --

விஜய்யின் 66வது படம் அரசியல் கதையம்சம் கொண்டதா..?

8

விஜய்யின் 66வது படம் அரசியல் கதையம்சம் உள்ள படமாக தயாராகி உள்ளது எனவும் இதில் விஜய் அரசியல்வாதியாக நடிக்கிறார் எனவும் தகவல் பரவி வந்தது. இதனை படக்குழுவினர் மறுத்துள்ளனர்.

 

இது குறித்து பேசிய இயக்குனர் வம்சி விஜய் படம் அரசியல் படம் இல்லை எனவும் இதன்மூலம் அபூர்வமான திரை அம்சத்தில் தயாராகி வருகிறது எனவும் குறிப்பிட்டார்.

 

இந்த படத்தில் தெலுங்கு சாயல் இருக்காது எனவும் முழுமையான தமிழ் படமாக இருக்கும் எனவும், படத்தில் நடிக்கும் பிற நடிகர் நடிகைகள் இன்னும் முடிவாகவில்லை என உத்தரவிட்டார். படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon