ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய நடிகை கீர்த்தி சுரேஷ்..!
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்து இருப்பவர் கீர்த்தி சுரேஷ். மறைந்த பழம்பெரும் நடிகையான சாவித்திரி படத்தில் நடித்த பிறகு அவரது மார்க்கெட் அந்தஸ்து உயர்ந்தது. தற்போது செல்வராகவன் சில படங்களிலும் நடித்துள்ளார்.
அண்ணாத்த படத்தில் ரஜினியின் தங்கையாக அவர் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தசரா என்ற தெலுங்கு படத்தில் நாணிக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
அந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அதிக சம்பளம் கேட்பதாகவும், இறுதியில் மூன்று கோடி ரூபாய்க்கு உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய படங்களில் கீர்த்தி சுரேஷ் 2 கோடி ரூபாயில் இருந்து 2.5 கோடி ரூபாய் வரை வாங்கியதாக கூறப்படுகிறது.






