--- --:--:-- --

காஷ்மீருக்கு நேரில் சென்று ஆய்வு செய்கிறார் அமித் ஷா..!

6

காஷ்மீரில் வசிக்கும் வெளிமாநிலத்தவர் பயங்கரவாதிகளால் கொல்லப்படுவது அதிகரிக்கும் நிலையில் அது குறித்து பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஆலோசனை நடத்தினர். பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அமித்ஷாவுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றார்.

 

காஷ்மீர் தற்போதைய நிலவரம் அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியவை குறித்து பிரதமருக்கு உள்துறை அமைச்சர் வழங்கியதாக தெரிகிறது. இதற்கிடையில் நிலவரத்தை ஆய்வு செய்ய அமைச்சர் அமைச்சர் சனிக்கிழமை அங்கு செல்கிறார்.

 

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அவர் பேசுவார். கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் பொதுமக்கள் பதினொரு பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக காஷ்மீரில் வசிக்கும் வெளி மாநிலத்தவரும் முக்கிய இலக்குகளாக உள்ளனர்.

 

இந்த தாக்குதலின் பின்னணி குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே காஷ்மீரில் வசிக்கும் நூற்றுக்கணக்கான பீகார் தொழிலாளர்கள் உயர் அச்சத்தில் கிடைக்கும் பேருந்தில் ஏறி வெளியேறி வருகின்றனர்.

 

பயங்கரவாதிகள் பொதுமக்களின் ஆதார் அட்டைகளை சோதித்து வெளிமாநில தவறாக இருந்தால் தாக்குவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon