4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை..!
புலன் விசாரணையில் உள்ள குறைபாடுகள் காரணமாக குற்றவாளிகள் தப்பி விடுவதாக வேதனை தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆசிரியருக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆசிரியர் பெரேரா குற்றம் புரிந்ததற்கு ஆதாரங்கள் உள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியாக வாக்குமூலம் அளிப்பார் என எதிர்பார்க்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
கீழமை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட புதுச்சேரி மழலையர் பள்ளி ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.






