--- --:--:-- --

தலைமை ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வட்டார கல்வி அதிகாரி..!

2

திண்டுக்கல் மாவட்டத்தில் தலைமை ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வேடசந்தூர் வட்டார கல்வி அதிகாரி அருண்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

தலைமை ஆசிரியர்களுக்கு நேரிலும் செல்போன் மூலமாகவும் இவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தனர். இதுதொடர்பான ஆதாரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அதிகாரி அனுப்பி வைத்துள்ளார்.

 

அதன் பேரில் முதன்மை கல்வி அலுவலர் கருப்பசாமி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டதற்கு குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon