ஹிந்தியில் ரீமேக் ஆகும் மெட்ராஸ் படம்..!
ரஞ்சித் இயக்கத்தில் உருவான மெட்ராஸ் படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருந்தார். ஒரு சுவரை மையமாக வைத்து இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது.
கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.






