--- --:--:-- --

ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்காததால் கொலை செய்த நபர்..!

13

ஈரோடு அருகே பூக்கடை வியாபாரி கொல்லப்பட்ட சம்பவத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் ஆற்றங்கரை பகுதியில் நாகராஜன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

உடலில் பலபகுதிகளில் காயம் இருந்த நிலையில் இது கொலையாக இருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பூக்கடை வியாபாரியான இவரின் மரணம் உறவினர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலையாளிகளை போலீசார் தேடிவந்தனர்.

 

இந்தச் சூழலில் சம்பவத்தன்று நாகராஜன் உடன் இருந்தது கட்டிட தொழிலாளியான சண்முகம் என தெரியவந்தது. ஆப்பக்கூடல் சக்தி நகரை சேர்ந்த சண்முகம் நாகராஜனின் நண்பராக இருந்துள்ளார். இருவரும் ஆற்றங்கரை பகுதிக்கு வந்துள்ளனர்.

 

அப்பொழுது சண்முகம் ஓரினச்சேர்க்கைகாக நாகராஜனை அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுக்கவே ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்தார். அப்பொழுது கீழே கிடந்த கல்லை எடுத்து நாகராஜனின் தலை முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் அடித்ததில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon