--- --:--:-- --

அக்டோபர் மாதம் 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை..!

4

இந்தியா முழுவதும் பல்வேறு திருவிழாக்கள், அரசு விழாக்கள் அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படுகின்றன. இதனை முன்னிட்டு வங்கிகளுக்கு இருபத்தியோரு நாட்கள் விடுமுறை அளித்து இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

 

வங்கிகளுக்கான அக்டோபர் மாத விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. 2-வது 4-வது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உட்பட 21 நாட்கள் விடுமுறை நாளாக உள்ளன. அதே நேரத்தில் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது.

 

எடுத்துக்காட்டாக அக்டோபர் 1ஆம் தேதி வங்கிகள் அரையாண்டு கணக்கு முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது சிக்கிம் மாநிலத்திற்கு மட்டும் பொருந்தும். அதேபோல் அந்தந்த மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகை களுக்கு ஏற்ப விடுமுறை தினங்கள் குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

 

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி விழா ஆகியவற்றிற்காக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளன. இவை தவிர இரண்டாம் நாள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகளுடன் சேர்த்து மொத்தம் 11 நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளன.

 

அதனால் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் வங்கி தொடர்பான பணிகளை விடுமுறை பட்டியலுக்கு ஏற்றவாறு முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது நல்லது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon