--- --:--:-- --

பிச்சை எடுத்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்..!

8

மதுரையில் முக்கிய இடங்களில் கை குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை கண்காணித்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

மதுரை மாநகர் பகுதிகளில் ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் கோரிப்பாளையம் காளவாசல் உள்ளிட்ட முக்கிய சாலை சந்திப்புகளில் கை குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

 

இதனால் அதிக அளவில் புகார்கள் குழந்தைகள் நல அமைப்பினருக்கு வந்த நிலையில் மாநகர காவல்துறை விபச்சாரம் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

முதற்கட்டமாக மதுரை ரயில் நிலைய பகுதிகளில் சந்தேகத்திற்குரிய வகையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நபர்கள் மற்றும் குழந்தைகளை மீட்டுள்ளனர். தற்போது வரை ஆறு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon