காதில் ஹெட்போன் மாட்டியதோடு மர்மமான முறையில் இறந்து கிடந்த நபர்..!
பெரம்பலூரில் தனது வீட்டில் காதில் ஹெட்போன் மாட்டியதோடு மர்மமான முறையில் இறந்து கிடந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வழக்கறிஞரான அருள் என்ற நபர் புதிய பேருந்து நிலையம் அருகே வாடகை வீட்டில் வசித்து வந்தார். 20 நாட்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன் மனைவி தாய் வீட்டிற்கு சென்று தனியாக தங்கியிருந்துள்ளார். காலை வீட்டிற்குள் சடலமாக கிடந்தார்.
உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்த வீட்டுக்குள் கையில் செல்போனுடன் காதில் ஹெட்போன் மாட்டி உட்கார்ந்த வாக்கில் இறந்து கிடந்த அவரது உடலில் சில இடங்களில் காயங்கள் இருந்ததாக கூறப்படும் நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






