நடிகர் அர்ஜுன் பாலியல் தொந்தரவு அளித்ததாக கன்னட நடிகை புகார்..!
நிபுணன் படத்தில் நடித்தபோது நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகாரில் பட தயாரிப்பாளர், இயக்குனர் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கடந்த 2014ஆம் ஆண்டு அளித்த புகாரில் பெங்களூரு போலீஸார் நடராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகும்படி படக்குழுவினருக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
அவர்கள் ஆஜர் ஆகாத நிலையில் மீண்டும் நிபுணன் படத்தின் தயாரிப்பாளர் ஜெயராம் இயக்குனர் அருள் அரவிந்த் எடிட்டர் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.






