12- 18 வயதுடையவர்களுக்கு ஊசியில்லா கொரோனா தடுப்பு மருந்து..!
குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பு மருந்து அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் சைடஸ் கேடில்லா நிறுவனம் சைகோவிட் மருந்தை தயாரித்து வருகிறது.
இந்த மருந்து 12 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கான 3 டோஸ்களை கொண்டது. இந்த நிலையில் விரைவில் சைக்கோவிட் மருந்தை வெளியிடுவோம் என்றும் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து கிடைக்கும் எனவும் அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கூறியுள்ளார்.
ஊசி மூலம் தடுப்பு மருந்து செலுத்தாமல் தோல் பகுதியில் ஹைபாடர்மிக் நீரின் மூலம் அதிர்வலைகள், அழுத்தம், மின்முனை மூலம் மருந்து செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






