இரண்டு சுரங்கப்பாதைகள் வழியாக விமானத்தை இயக்கி சாதனை..!
இத்தாலியை சேர்ந்த விமானி ஒருவர் சுரங்கப்பாதையில் விமானத்தை இயக்கி உலக சாதனை படைத்திருக்கிறார். இஸ்தான்புல் நகருக்கு அருகே 5,300 அடி நீளமுள்ள இரண்டு சுரங்கப்பாதைகள் வழியாக விமானத்தை செலுத்தியுள்ளார்.
இரண்டு சுரங்கத்திற்குள் மணிக்கு 150 மைல் வேகத்தில் பறந்தது. சுரங்கத்தை நாற்பத்தி மூன்று வினாடிகளில் கடந்தது. தரையிலிருந்து வெறும் மூன்றரை அடி உயரத்தில் பறந்தது உட்பட 5 உலக சாதனைகளை அவர் படைத்திருக்கிறார்.






