புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு..!
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தென் மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தென் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






