--- --:--:-- --

மனைவி இறந்த செய்தி கேட்டு துக்கம் தாளாமல் கணவனும் உயிரிழப்பு..!

10

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் மனைவி இறந்த செய்தி கேட்டு துக்கம் தாளாமல் கணவன் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் பூசாரியாக இருந்து வந்தவர் பூங்காவனம்.

 

90 வயதான இவருக்கு மனைவி எல்லம்மாளும், செல்வராஜ் என்ற மகனும் இருந்தனர். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மனைவி உயிரிழந்தார் இதனை தொடர்ந்து தீபாராதனை செய்த நிலையில் தூங்காவனம் துக்கம் தாங்காமல் உயிரை விட்டுள்ளார்.

 

என்றும் இணைபிரியாமல் இருப்போம் என்று வாழ்ந்து வந்த முதிய தம்பதி ஒன்றாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது உடலுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழக சிறுபான்மையினர் நல அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon