இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்..!
இலங்கையில் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து உள்ளதால் இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
இலங்கையில் கொரொனா பாதிப்பு 3.5 லட்சத்திற்கு மேல் உயர்ந்துள்ளதால் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று இரவு முதல் இலங்கை முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது.
இதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மக்கள் வெளியே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று இலங்கை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.






