--- --:--:-- --

மோகன் ராஜா இயக்கும் படத்தில் நடிக்கும் நயன்தாரா..!

12

மோகன் ராஜா இயக்கும் படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் லூசிபர்.

 

இந்த படத்தில் நடிகர் மோகன்லால் அரசியல்வாதியாக நடித்து அசத்தி இருந்தார் தற்போது லூசிபர் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. சிரஞ்சீவி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர் மோகன் ராஜா இந்த படத்தை இயக்கி வருகிறார்.

 

இந்த படத்தில் நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் மூலம் நடிகை நயன்தாரா இயக்குனர் மோகன் ராஜாவுடன் மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்ற உள்ளார். ஏற்கனவே இயக்கிய தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற படங்களில் நயன்தாரா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon